கொமோரா

        வளர்ந்து வரும் இளம் எழுதார்களின் ஒருவர் லட்சுமி  சரவணகுமார். அவரை படிக்கச் வேண்டும் என்ற ஆவல் என்னுளே இருந்து கொண்டேஇருந்தது. அந்த ஆவலுக்கு  தீனிபோட்டது  "கொமோரா". அதிக பக்கங்கள் கொண்ட நாவல் என்றாலும் எந்த இடத்திலும் தோய்வு இல்லை. தான் படைத்த நாவல்களில் முக்கியமானது அல்லது தன்னைப் படிக்க வேண்டும் என்பவர்களுக்கு பரிந்துரைக்கும் நாவலாக இதை தான்  குறிப்பிடிக்கிறார் சரவணகுமார்.

பக்கங்கள் போல கதாபாத்திரமும் விரிங்கின்றன. கதிர் தான் கதையின் நாயகன் அவனை சுற்றி தான் பல கதாபாத்திரம் அமைகிறது.சாத்தானின் புத்தகம் வெறுப்பு என்ற கோட்டுபாட்டுலே இந்த நாவலை அறிமுகப்படுத்துகிறார் லட்சுமி. ஆனால்  இதில் வெறுப்பை தவிர்த்து நட்பு, காதல்,பாசம்,காமம்,இச்சை,துரோகம் என மனிதனின் பல குணங்களை யாரும் காட்டாத வகையில் தொகுத்துள்ளார். பல குறியீடுகளை வைத்துள்ளார் குறிப்பாக நீலப்புத்தகம்,சிவப்பு புத்தகம் என இரண்டு பகுதியாக இந்நாவலை பிரித்துள்ளார் சில பல இடங்களில் புத்தர் தத்துவம் , இயேசு உபதேசம் , கவிதை  என ஆங்காகே முளைக்கின்றது.


லட்சுமி  சரவணகுமார்


கதை பல களங்களுக்குச் செல்கிறது இது வெறும் நாவலாகக்  கடைந்து விடமுடியாது கம்போடிய நாட்டின் வரலாற்றை அறிவதற்கும் மற்றும் சிறைவாழ்க்கை பற்றி உணர்த்துவதற்கும் கருவியாக அமைகிறது. வரலாறு எப்போதும் மோசமாக இருந்துகிறது பசியின் வலியை இந்த கம்போடிய நாட்டின் வரலாற்று குறிப்பில் தெரிகிறது. சிறைச்சாலை வாழ்க்கையில் கதை நகரும் போது வடசென்னை படத்தை ஞாபகப் படுத்தினாலும் அதில் குறிப்பிடாத பல சம்பவங்கள் இதில் உள்ளன.

இச்சைகளும் காமமும் இதில் சற்று அதிகமாக உள்ளதால் உட்கொள்ளவதற்கு கடினமாக உள்ளது ஆனாலும் சிலர் வாழ்க்கையில் அது அப்படிதான் அமைகிறது என்ற கருத்தையும் நாம் புறம்  தள்ளிவிடமுடியாது.


எல்லாரும் போல பால்ய வாழ்கை கதிருக்கு அமையவில்லை அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவனே எதிர்கொள்கிறான்.அவன் நேசிக்கும் அனைத்தும் சில காலமாக அமைகிறது வெறுப்பின் உச்சத்தில் இதற்கு காரணமாக இருப்பவரை பழிவாங்குகிறான். இது உண்மையில் பழிவாங்கும் தில்லார்  நாவல் ஆனால்  இது அவ்வாறு மட்டுமே இருந்து இருந்தால் பத்து ஒட பதியொன்னு ஆக சென்றிருக்கும்.அவர் இந்த நாவலுக்காக எடுத்திருக்கும் மெனகெடல்  என்பது இதை வாசிக்கும் போது  தெரிகிறது.


"மனிதன் குறைந்தபட்ச சந்தோசத்தோடேனும் வாழ வேண்டுமாயின் பாதுகாக்க வேண்டியது ஒன்று மட்டும் தான் இருப்பதிலேயே எளிதாக கிடைக்ககக்  கூடியதும் அது தான் சுயநேர்மை ஏதோ ஒரு கணத்தில் மற்றவர்களை ஏமாற்றியிருக்கலாம் ஒரு போதும் என்னை ஏமாற்றி கொண்ட தில்லை "


வெறுப்பின் உச்சம் கொமோரா 

Link to buy

Popular Posts