கிதார் இசைக்கும் துறவி
சில சமயங்களில் சிறுகதை வாசிப்பு குமட்டிவிடுகிறது பொரும்பாலும் ஒரே கதை போன்று பல சிறுகதைகள் அல்லது அவற்றின் சாரம் போல இருப்பதனால் இருக்கக்கூடும். எஸ்.ரா இதில் இருந்து கொஞ்சம் வேறுபடுகிறார் அதற்க்கு சிறுகதையின் தலைப்பே உதாரணம். அவரது அவளது வீடு அப்புறம் வாங்கிய 18 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சின்ன சிறுகதை தொகுப்பு தான் கிதார் இசைக்கும் துறவி.
மெய்யழகன் படத்தில் வரும் வீடு காலி செய்யும் காட்சியை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது வலது கன்னம்.
ஊழியரின் மனநிலையை எப்படி ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் ஏற்றுகொள்கிறது என்பதே பனிக்கரடியின் கனவு.
கோபத்தின் எடை தன் கணவரிடம் சண்டை போட்டு கொண்டு ஒரு பெண் நள்ளிரவில் கோபித்து தனது தாய் வீட்டுக்கு செல்லும் கதை தான். ஆனால் மிகவும் பெண்ணின் மனநிலைகளை கூறுஆய்வு செய்யும்.
இது மட்டும் இல்லாமல் எல்லாம் கதையும் விசித்திரமான கதைக்களம்,கதைமாந்தர்கள் உள்ளடக்கியவை.

