சொனாட்டா
எப்போதும் புதிய எழுத்தாளர்களைப் படிக்கும் போது ஒரு பயம் ஏற்படும். அது படைப்பை மதிப்பீடு செய்ய காரணமாகவும், அவரின் அடுத்த படைப்பிற்கு நம்மை அழைத்து செல்ல அஸ்திவாரமாகவும் அமையும். சரவணன் சந்திரனின் பரிந்துரைப் பெயரில் தான் பாலுவின் சொனாட்டா அறிமுகம்.
சொன்னட்டா பாலுவின் முதல் நாவல் பரவலாக பேசப்பட்டதும் விமரிசிக்க பட்டதும் கூட. இளம் எழுத்தாளர்கள்
தங்கள் முதல் கதையை மிகவும் கவனமாக கையாளுவார்கள். ஆனால் பாலு மட்டும் இதில்
சற்று விலகி நிற்கிறார்.Pronography பற்றியான கதையை தன் முதல் நாவலாக
வடிமைப்பதற்கு தைரியம் வேண்டும். ப்ரோனோக்ராபி (Pronograghy) களம் என்பது ஒரு
மெல்லிய கோடு சற்று மிகையானாலும்
நோக்கமே மாறிவிடும். அதை இலக்கிய தன்மையோடு
ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் பாலு அதற்கு என்
பாராட்டுக்கள்.
யாருக்கு ஆனா நாவல் என்றால் இளைஞர்களுக்கு குறிப்பாக இந்த தலைமுறைக்கும் மற்றும் வரும் தலைமுறைக்கும் ஆனது. ருத்ர மற்றும் ஆரோக்கிய தாஸ் என இரு கதை பாத்திரைத்தைக் கொண்டு இரண்டு சரடுகளாக கதை பிரிகிறது (non-linear).நாம் இருக்கும் காலகட்டத்தில் நேரிடும் பிரச்சனைகள் யாதும் புதியது அல்ல யாரோ ஒருவரால் கையாளப்பட்டு உள்ளது.முக்கியமாக பால்யக சிக்கல்களை அனைவரும் கடைந்து வந்திருப்பார்கள்.
உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் இச்சைகளைக் கொண்டாடும் நோக்கத்துடன் எழுதி விட்டு கேட்டால் transgressive என்று சம்மாளிப்பது.ஆனால் உண்மையான transgerssive தன்மை கொண்ட நாவல் என்றால் இதை கண்டிப்பாக கூறலாம்.
Porn,sports இரண்டையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி அதன் அம்சம்களை விவரிப்பதே சொன்னட்டா.பல இடங்களில் தத்துவ ரீதியாக போதாமை, சலிப்பு, உணர்ச்சி போன்ற பண்புகளை எளிய நடையில் உணர்த்தியுள்ளார்.அதில் ஒன்றை சரவணன் சந்திரன் முன்னுரையில் எடுத்து விட்ட காரணத்தினால் இதோ வேறொன்று."இன்பத்தின் பொருட்டு சரணடைவதே உண்மையான அடிமைத்தனம் எவ்வளவு நுகர்ந்தாலும் போதாமையை உணர்வதே அதன் ஊற்று".
பாலு தன் முதல் தொடக்கத்திலிலே நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவரது பலம் என்றால் தத்துவ ரீதியாக ஒன்றை கதாபாத்திரத்தின் மூலம் தெரிவிப்பது.

