என் பார்வையில்

 சந்தியா ராகம்

வாழ்க்கையில் நடக்கும் யதார்த்ததையச் சொல்லும் போது மனசை உறைய வைக்கும் ஆனால் வெகு சில மட்டும் சிந்திக்கவும் வைக்கும். அப்படி பட்ட ஒன்று தான் சந்தியா ராகம்.

பாலு மகேந்திரா தான் படைத்ததில் மிகவும் பிடித்தது "சந்தியா ராகம்" என்று கூறியுள்ளார். 61வது தேசிய விருதைத் தட்டி சென்றது. இப்படத்தில் வரும் சொக்கலிங்கத்தை நம் வாழ்க்கையில் அனைவரும் கடந்து சென்று இருப்போம் நரைத்த முடி, வட்டம் வட்டமாக சுருங்கிய தோலுடன், கூன் விழுந்த ஒரு கிழவர். கதை ஆரம்பிக்கும் நேர்த்தியை பாலுவை தவிர யாராலும் கையாள முடியாது.ஒரு கிழவனின் உள்ள குழந்தை தனத்தை அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி உள்ளார்.





கதையின் கருவை இரண்டாம் காட்சிகளில் புரிய வைத்து விடுவார் பாலு. " எப்பா வாசுவைப் பாத்தியா " என்று கேட்கும் போதும் "கருப்பி அதலாம் றெக்கை வளர்ந்தா பறந்து போக்கிடும்" என்று கூறும் வசனங்கள் மனசை வருடுகிறது.

இந்த படம் கருப்புவெள்ளையில் இருந்தாலும் மிகவும் பொருத்தம். இது ஒரு கிளாசிக் என்று நினைத்து தான் கருப்புவெள்ளையில் எடுத்துயுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, டைரக்சன் என்று தனது எல்லா திறமையும் ஒரே படத்தில் காட்டியுள்ளார் பாலு மகேந்திரா.

அன்று இருந்த மெட்ராஸ் வாழ்கைப்பற்றியும், பட்ஜெட் குடும்பம் பற்றி அறிய ஒரு ஆவணம் ஆகவும் உள்ளது. கதை நாயகனாக வரும் தாத்தா நடித்துயுள்ளார் என்று கூறமுடியவில்லை இயல்பாக தானாகவே வாழ்ந்தார் என்று தான் கூறமுடியும். இந்த படத்தைப் பற்றி பேசும் போது துளசி கதாபாத்திரத்தைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது துளசியாக வரும் அர்ச்சனா யதார்த்தம். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை என்ற கூறலாம். மொத்தத்தில் சந்தியா ராகம் ஒரு யதார்த்தம்.

Popular Posts