என் பார்வையில்

அவள் அப்படித்தான்

புத்தகத்தை அறிமுகப்படுத்துவது இன்னொரு புத்தகம் தான். அதுபோல எனக்கு இதை அறிமுகப்படுத்தியது மகளிர் மட்டும் - 2 படம் தான். ஏன் இதை பார்க்க வேண்டும் என்றால் தலைப்பு வேறு என்ன காரணங்கள் கேட்டால் ரஜினி, கமல், இளையராஜா.

என்னதான் படத்துல ரஜினி, கமல் இருந்தாலும் படம்  ஸ்ரீபிரியாவை சுற்றி தான் நகரும். ஸ்ரீபிரியாவின்  கதாபாத்திரம் மஞ்சு இந்த கதாபாத்திரம் ஜெயகாந்தனின் கங்காவை ஞாபகப்படுத்கிறது. இதில் வரும் ரஜினியோட தத்துவங்கள் எல்லாம் தினமும் whatsapp status-ல போடருதான். அதிக மேகப் இல்லாமல் ஒரு சேலை கட்டி சரியாக தலை சீவாமல் முடியை முன்னால் விட்டு வட்டமாக சாந்து பொட்டு வைத்து வரும் ஸ்ரீபிரியாவின் அழகு இப்ப இருக்கும் நடிகைகளுக்கு வராது.

பாரதி கண்ட புதுமை பெண்ணாக நினைக்கும் மஞ்சு மற்றவர் பார்வைக்கு மிகவும் வித்தியாசமானவள். அவள் ஒரு நெருப்பு என்பது ஒன்று அல்ல பல வசனங்கள் தெளிவுபடுத்தி உள்ளது. வசனம் என்பது படத்துக்கு மிக முக்கியம் என்று இதில் தெரிகிறது.படத்தில் வரும் அனைத்து வசனமும் தத்துவ ரீதியாக இருந்தாலும் ஆழமானவை.

பெண்கள் பற்றி ஒர் டாக்குமெண்டரி எடுப்பவராக வரும் கமல். அவர் கேட்கும் கேள்விகளுக்கு இப்பவும் பதில் இல்லாத கேள்விகளாகவே இருக்கு that's about women's liberty. கமலின் கோட்பாடுகளுக்கு நேர்மாறாக இருக்கும் ரஜினி இருவரும் பேசும் உரையாடல் சிறப்பு.

இளையராஜாவின் இசை எல்லாருக்கும் தெரியும். "உறவுகள் தொடர்கதை......" என்ற பாடல் மனதிற்கு ஒரு தாலாட்டு. இதை இயக்கியவருக்கு இது ஒரு அறிமுகம் படம் என்பது தான் ஆச்சரியம். " அவன் என்ன தேவடியா சொன்னா கூட பரவாயில்லை ஆனா தங்கச்சி சொன்னால" என்ற வசனம் மிகவும் ஆழமான காதலை குறிப்பிடுகிறது மற்றும் என்னக்கு பிடித்தவை கூட. இதை விட படத்துக்கு ஏற்ற தலைப்பு இல்லை உண்மையில் அவள் அப்படித்தான்.

More than a picture it is a philosophical, sensible novel about a woman and her relationships.

Popular Posts