புத்தக அலசல் - கடல்புரத்தில்
கடல்புரத்தில்
"கடல்புரத்தில்" நாவல் பற்றி ஒரு உரையாடல் தான் இது. இந்த நாவல் நான் வாங்குனது காரணம் பெயர் ஏனென்றால் கடல் பற்றி படிப்பதில் எனக்கு ஒரு ஆர்வம்.
பிலோமி என்ற ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு தான் இந்த கதை நகரும்.முதலில் இந்த கதைக்குள் செல்ல சில நேரம் ஆகிறது காரணம் மணப்பாடு பாஷை ஆனாலும் அதுதான் கதைக்கு பிளஸ் என்று சொல்லலாம்.
அந்த பாஷையின் மூலம் கடல்நீரில் நம்மை நனைய வைக்கிறார். கதையின் கரு - பிலோமி, குடும்பம், காதல், கொண்டாட்டம், ஊர் மக்கள், படகு, மீன் மற்றும் கடல் இவைகளின் கலவை தான்.
வண்ணநிலவனின் எழுத்துகள் இல இடங்களி்ல் மீண்டும் வாசிக்க வைத்தது. முக்கியமாக அவரது திரைக்கதை ஒரு கடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவற்றின் சத்தத்தில் விளக்குகிறார். ஒரு இடத்தில் பிலோமி தன் காதலனை நினைத்து இரவில் புறம் கதவைத் திறந்து வெளிய செல்கிறாள். அதற்கு முன்னால் ஒரு திரைக்கதையின் மூலம் இந்த காட்சியைத் தெளிவுப்படுத்துகிறார்.
கடலோரம் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவிட்டுயுள்ளார். கடலில் மிதந்து போவதை போல கதையில் வரும் கதாபாத்திரங்கள் நம்மைக் கைப்பிடித்து செல்கிறது. எனக்கு பிடித்த கதாபாத்திரம் தரகர் அவரைப் போல பார்ப்பது அரிது.சில இடங்களி்ல் தெய்வு ஏற்பட்டாலும் வேகமாக செல்ல கூடியவை தான்.
மொத்ததில் கடலை விரும்புவோர் கடல்புரத்தில் தைரியமாக பயணிக்கலாம் கவிழமாட்டீர்.


