ACT-1987

ACT-1987


         படங்கள் வெறும் பொழுதுபோக்குவதற்கு மட்டும் இல்லை தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதற்கும் தான். அப்படிப்பட்ட படம் தான் ACT-1987 ஒரு கன்னட படம். ஏன்,ஏதற்கு பார்க்க வேண்டும் என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.நாம் தினமும் கவர்மென்ட் அலுவலகளில்  நிறைய பேர்களைப் பார்கிறோம் இந்தியன் படத்தில் வரும் மனோரம்மாவை  போல எத்தனையோ பேர்கள் இன்னும் சர்கார் அலுவலக வாசலில் தான் இருக்கிறார்கள். 

அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் அவர்கள் குறைகள் தீர்ந்தனவா என்றால் பதில் இல்லை. அப்படி தினமும் சர்கார் அலுவலக வாசலில் நின்று ஒடுங்கிப்போகும் கர்ப்பிணியின் கதை தான் இது.அவளின் வெறுமை கோபம் ஆகி அங்கு இருக்கும் அதிகாரிகளைப் பினை கைதிகளாக மாற்றி அரசிடம் பேரம் பேசி அவளின் குறைகள் நிறைவேற்றினாளா இல்லையா என்பது தான் கதையின் சுருக்கம். பாடல்கள் , பிளாஷ்பேக் நீண்ட கதை என்று ஒன்றும் இல்லாமல் நிதானமாக திரில்லரை நம்முள் கடக்க முயல்கிறனர். அரசு,அதிகாரிகள்,பத்திரிகைகள்  இவர்களின் உன்மை முகத்தையும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளனர்.



படத்தில் முக்கிய கதாபாத்திரமாக  கீதா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். மேலும் ராம் கோபால் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் பார்ப்பதற்கு நம்ம ஊர் ஜான் விஜய் மாதிரி இருக்கிறார் அவருடைய நடிப்பும் அருமை. மிக பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும் அனைவரின் நடிப்பு எதார்த்தம் ஒரு சில இடங்களில் அருவி படத்தை ஞாபகம் படுத்தியது இருப்பினும் அனைவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்.       


இந்த படம் சர்கார் படம் மாதிரி சில சட்டத்திட்டங்களை விவாதிக்கிறன.

Popular Posts