புத்தக அலசல் - சாயாவனம்

சாயாவனம்


       இது என்னுடைய  இரண்டாவது நூல் அலசல் ஆகும். நாம் நிறைய  பழைய  கட்டிடங்களைக் கடந்து இருப்போம். அதன் அழகு நேர்த்தி எல்லாவற்றையும் பற்றி பேசி இருப்போம் ஆனால் ஒரு முறையாவது அந்த கட்டிடம் தோன்றுவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது உண்டா. அது ஒரு வனமாக  இருந்திரந்தால் அப்போது எப்படி அழித்துருப்பார்கள் என்று நம்முள் எழக்கூடிய யோசனயை தீனி போடுவது தான் இந்த நாவலின் சுருக்கம்.





இக்கதையில் நிறைய கதை மாந்தர்கள் வந்தாலும் பிரதானமான கதாபாத்திரம் சிதம்பரம்,தேவர் மற்றும் வனம்,நரி,குரங்கு,பறவை. இரண்டு விதமாக இக்கதையை உணரலாம் ஒன்று வனத்தின் பார்வையில் மற்று ஒன்று சிதம்பரம் பார்வையில்.போர் போன்ற காட்சி அமைத்து வனத்தை சிதம்பரம் எப்படி அழிக்க முற்படிகிறான்  என்று சொல்லுவது சிறப்பு. பிரம்பு, காரை, தாழை, புன்னை போன்ற மரம், செடி, கொடிகளின் குணத்தை அப்போரில் அருமையாக விளக்கியுள்ளார்.

அதிகமாக கேள்விப்படும் காட்டுத்தீ  போன்ற சம்பங்கள் நம் மனதைக் காயப்படுத்தும் அது போல் இங்கே ஒரு தீ வனத்தைச் சுற்றி பரவி அங்கு வாழும் உயிரினங்கள் மீதும் தொட்டு செல்லுகையில் கண்முன்னே நடப்பதை போல காட்டியுள்ளார் சா.கந்தசாமி. நான் நிறைய செடி , கொடி, பறவை  பார்த்திருக்கிறேன் ஆனால் அதனுடைய பெர்கள் தெரியாது இதில் அவர் அதன் பெயர்களைப் பற்றி அழகாக பதிவுட்டுள்ளார்.

நம் தேவைக்காக காட்டை அழிக்கிறோம் ஆனால் பின்பு தான் தெரிகிறது காடு என்பது நம் தேவைக்குதான் என்று.

Popular Posts