புத்தக அலசல் - ரசவாதி
THE ALCHEMIST
ரசவாதி
K.G.F படம் பார்த்து எத்தனை பேரு மோட்டிவேட்டு ஆகிருப்போம் என்னதான் அது ரெண்டு நாளுக்கு மேல தாங்காது நமக்கே தெரியும் இருந்தாலும் பஞ்சு டயலாக்கலாம் கேட்கும்போது செமையாக இருக்கும். அது மாதிரி ஒரு அனுபவம் ஒரு புத்தகம் வாயிலாக கிடைச்சா எப்படி இருக்கும். அதுவும் அந்த புத்தகம் த்ரில்லர் கதை சார்ந்து இருந்தால் எப்படி மிஸ் பண்ண முடியும் அப்படிப்பட்ட ஒன்று தான் "THE ALCHEMIST"
பதின் வயது நிரம்பிய பையன் வீட்டுல் அவனைப் பாதிரியாராக வேண்டுமென நினைக்கையில் அவன் அதை விரும்பவில்லை. அவன் ஆசை வேறொன்றாக இருந்தது அதை தன் தந்தையிடம் சொல்கையில் அவர் முதலில் மறுத்தார் பின்பு இவன் பட்டா தான் திருந்துவான் என்று சம்மதித்து விடுவார். அப்படி என்ன தான் அவனுடைய ஆசை என்றால் ஊரைச் சுற்றி பார்ப்பது அதற்கு அவன் தேர்ந்தெடுத்த தொழில் ஆடுகளைப் மேய்ப்பது. தினமும் அவன் கனவில் வரும் காட்சி பற்றி கனவுகளை எடுத்துரைக்கும் ஒரு கிழவிடம் சொல்கிறான்.அதற்கு அவள் உன் கனவை தொடர்ந்து சென்றால் புதையல் உண்டு என்கிறாள்.அவன் புதையலைக் கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதுதான் கதையின் நோட்டம்.
இதை எழுத்தாளர் Paulo Coelho மிகவும் த்ரில்லராக மட்டுமல்லாமல் தத்துவரீதியாகவும் சொல்லுவது தான் சிறப்பு. நம் எல்லோருக்கும் ஒரு கனவு உள்ளது அது தொடரும்போது பல சிக்கல்கள் இருக்கும் ஆனால் இதில் அவர் சிக்கலை மட்டும் பார்க்காமல் அங்கு இருக்கும் தீர்வுகான விடையும் பார்க்க வேண்டும் என்கிறார். இது ஒரு fiction என்று சொல்லிட முடியாது fiction கலந்த ஒரு self-help புத்தகமாகவே பார்க்கலாம்.
இந்த புத்தகத்தின் மூல மொழி ஸ்பானிஷ் என்றாலும் பல மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் இது. நான் இதை ஆங்கிலத்தில் தான் படித்தேன் மிகவும் எளிமையாகவும் சிறார் படிக்கும் பேண்டஸி நாவலாகவும் தான் உள்ளது. இந்த புத்தகம் தமிழில் " ரசவாதி" என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப் பட்டு உள்ளது. இந்த புத்தகம் வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை தொடர்புகொள்ளுகள்
"எப்படி ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி."



