புத்தக அலசல் - கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்
கடந்த வாரம் கி.ரா இறந்ததாக செய்தி வந்தது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் தவிர அவரது புத்தகத்தை படித்தது இல்லை.மூன்று மாதம் முன்பு தான் அவரது நாவல் ஆன கோபல்ல கிராமத்தை வாங்கி பிறகு படிக்கலாம் என காத்திருப்பு பட்டியலில் வைத்திருதேன்.சரி இனியாவது அவரை அணுங்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரது கோபல்ல கிராமம் என் அலைமாரியில் மூச்சி முட்டி கொண்டு இருந்தது. அதற்கு முதலில் விடுதலை கொடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இங்கிலீஷில் coincidence என்ற வார்த்தை உண்டு அதற்கு அர்த்தம் நிகழ்வு பொருத்தம். அது மாதிரி நான் வாசித்த அவரது முதல் நாவலும், அவர் எழுதிய முதல் நாவலும் ஒன்று தான். அது தான் கோபல்ல கிராமம்.
நான் வாசித்த நாவலில் இது சற்று வித்தியாசமானது. தொடர்ச்சியில்லாத அத்தியாங்கள், கிராம்ம வழக்கு சொற்கள், கதை சொல்லல் முறை அனைத்தும் வித்தியாசமாகவும் மிக எளிமையாகவும் உரையாடல் போல கடத்தி செல்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை இருந்த கிராமம் எவ்வாறு இயங்கியது என்பது தான் கதையின் மேலோட்டம். பல கதை மாந்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நாவலில் முக்கிய கதாப்பாத்திரம் என்று யாரையும் சொல்ல முடியாது. பல தலைமுறைகள் பார்த்த மூதாட்டின் வாயிலாக புலம்பெயர்த மக்களின் கதையை சொல்லும் காட்சி நம் கற்பனைக்கு தீனிப்போடுகிறது மட்டும் இல்லாமல் அவர்களின் நிலம்,வீடு எல்லாம் விட்டு அகதி போல் தெலுங்கு தேசத்தை விட்டு தமிழகத்தில் வந்து குடியேறி கிராமத்தை உருவாகிறார்கள். இதை எல்லாம் வாசிக்கும் போது கிராம்மம் இப்படி தான் உருமாறிருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.
கிராமத்தினர் அவர்களுக்கு ஏற்ப பட்ட பெயர்கள் வைத்துக்கொண்டு அதிற்கான காரணங்கள் சொல்லும்போது மிகவும் நாகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். இதில் வரும் அனைவரும் நல்லவர்களாக இருக்கிறார்கள் கதை ஒரு கொலையில் தான் அரம்பிக்கிறது இருப்பினும் கடைசில் அந்த கொலைக்காரனும் தெய்வமாக வழிபடுகிறார்கள். சினிமா பாணியில் காட்டும் பிளஷ்பக் போன்ற முறையை எழுத்து வடிவில் அப்போதே கையாண்டு உள்ளார். காப்பான் படத்தில் வரும் சம்பவம் போல இங்கே ஒரு காட்சி, ஒன்றும் இல்லை " வெட்டுக்கிளி " சம்பவம் தான் இதை கி.ரா அவர்கள் 1976-ல திரைகதையுடன் எழுதிவிட்டார் வாசிக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.
இது ஒரு சின்ன பக்கங்கள் கொண்ட புத்தககம் என்றாலும் கிராமத்தின் பல பரிமாணத்தைக் காட்டியுள்ளார்.பொதுவாக புத்தகம் படிக்கும் போது இன்னும் இத்தனை பக்கம் இருக்கிறதா என்று நினைப்பேன் ஆனால் இங்கே அய்யோ முடிந்துவிட்டதே என்று தான் எண்ணினேன் காரணம் கதையின் முடிவு தொடர்ச்சி உள்ளது போல இருந்தது. அதனுடைய இரண்டாம் பாகம் தான் "கோபல்லபுரத்து மக்கள்" அதையும் படிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன். ஏனெனில் அது சாஹித்திய அகாடமி விருது பெற்றது.
அனைத்து வயதினருக்கும் நான் பரிந்துரைக்கும் ஒரு நாவல் இது.பின் குறிப்பு : இந்த நாவலைப் படிக்கும் போது கதைவை அடைத்துக்கொண்டு படிக்கவும் பின்பு உங்களால் கற்பனை கிராமத்தில் இருந்து வெளியே வர முடியாது. "கரிசல் நாயகன்" என்னும் சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் கி.ரா அவர்கள்.



