நாய்கள் ஜாக்கிரதை
இந்த உலகில் சிறந்த நண்பன் என்றால் என்னைப் பொருத்த வரையில் புத்தகம் தான். அதன் பின்னே ஒன்று என்றல் அது நாய் தான். நாய் என்றால் பெரும்பாலும் எல்லாருக்கும் பிடிக்கும். அது குட்டியாக வாங்கி வளர்ப்பது என்பது சின்ன குழந்தைகளின் ஆசையாகவே அமைகிறது. நாய்களைப் பற்றியும் நாய் குட்டிகளையும் பற்றியும் பல திரைப்படங்கள் இருக்கின்றன. அனைத்து படத்திலும் அது ஒரு வீட்டில் வளரும் அதனால் அந்த வீடு எப்படி மாறுகிறது அல்லது தான் வசிக்கும் வீட்டில் இருந்து தொலைந்து போய் பின்னே அது தன் முதலாளியை எப்படி கண்டுப்பிடிக்கிறது போன்றே இருக்கும். இதில் சற்று வித்தியாசமானது தான் " CALL OF THE WILD " என்ற திரைப்படம். இது ஜாக் லண்டன் (Jack London) எழுதிய குறுநாவலின் தழுவல். இந்நாவலை அறிமுகப்படுத்திய ஸ்.ரா அவர்களுக்கு முதல் நன்றி.
நாவலைப் படிப்பதும் அதை திரையில் பார்ப்பதும் ஒரு விதமான அனுபவம். படத்திற்கும் நாவலுக்கும் நிறைய வித்தியாசங்கள். படத்தில் கதையைச் சற்று மாற்றி உள்ளனர். எப்பொழுதும் ஒரு நாவலை முழுமையாக படமாக எடுக்கமுடியாது.ஆனாலும் ஒரு நாயை திரையில் தத்துருவமாக படம் பிடித்து உள்ளனர். நாவலைப் படிக்கும் போது ஒரு நாயின் கதை மாதிரி இருந்தாலும் அதில் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு லேடெர்ஷிப் , மேனேஜ்மென்ட் (Leadership, Management) திறனக்கு ஒரு எடுத்துக்காட்டு என்ற சொல்லலாம்.
கதையின் படி பக் (BUCK) ஒரு ராஜவீடு கன்று குட்டியைப் போல வாழ்ந்து வருகிறது. அப்போதுதான் NORTH ARTIC-ல் மஞ்சள் உலோகம் (GOLD) கிடைப்பதாக தகவல் பரவின. அனைவரும் அதை நோக்கி செல்கிறார்கள் அதனால் முட்டைகளைச் சுமப்பதற்கு நாய்கள் தேவைப்பட்டன. அந்த வீட்டில் வேலைசெய்யும் நபர் ஒருவன் buck-யைக் கடத்தி விற்றுவிடுகிறான். பின்னர் அது பல கைப்பட மாறி NORTH ARTIC-ல் ஸ்லெட் நாயாக (SLED DOG) போய் சேர்கிறது.பணியும் உறைந்த நீரும் அதற்கு புதிதாகவே இருக்கிறது.அதன் பின் எவ்வாறு அது அங்கே தாக்குப்பிடிக்கறது இறுதில் என்ன ஆனது என்பது தான் CALL OF THE WILD.
நாய்கள் நரி இனத்தைச் சேர்ந்ததுதான். அது எப்பொழுது ஒரு நாய் தன் முன்னோர்கள் போன்று மாறுகிறது என்பதையும். அது மாதிரி மாறினாலும் தன் நன்றியுள்ள குணத்தையும் விலகாது இருப்பதையும் அழகாகக் காட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் BUCK-ம் ஹஸ்கி நாயும் சண்டைபோடும் காட்சிகள் அழகு.
BUCK-யைப் போல நாமும் ஒரு புதிதான சுழலில் உட்கொள்ளும் போது அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டும். SURVIVAL OF FITTEST ஏற்ற சிறந்த கதை.இது நமக்கும் பொருந்தும். வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் படத்தப் பாருங்கள் அல்லது நாவல் கிடைத்தால் வாசியுங்கள்.


