நாவலில் box-office படத்தில் ??


     பெரும்பாலும் பாண்டஸி கதை என்றால் நம் நினைவுக்கு வருவது ஹார்ரி பாட்டர், லார்ட் ஆப் ரிங்ஸ் (harry potter, lord of rings)  போன்றவை தான். ஆனால் ஏன் இதை மட்டும் சொல்லுகிறார்கள் வேற ஏதும் கதை இல்லையா என்று நான் நினைத்தது உண்டு. இந்த கேள்வியுடன் நான் தேடினேன் அப்படி என் தேடுதல் வேட்டையில் சிக்கியதுதான் "தி கோல்டன் காம்பஸ்" (THE GOLDEN COMPASS). இந்த படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது அப்போது இப்படம் சரியாக போகவில்லை.

பாண்டஸி படம் என்றால ஒரு நாவலின் தழுவல்தான். "ஹிஸ் டார்க் மாட்டேர்ஸ்" (HIS DARK MATTERS) என்ற பெரு நாவல் தொடரின் ஒரு பகுதி தான் தி கோல்டன் காம்பஸ். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் படம் மட்டும்  தான் சரியாக போகவில்லை ஆனால் இந்த நாவல் தொடர் க்ளோபல்  பெஸ்ட்செல்லெர்-ல் (Global Bestseller) ஒன்று மிகவும் பிரபலம். எப்போதும் இது போன்ற பிரசித்தி பெற்ற நாவலை தான் ஹாலிவுட் - ல்  படமாக எடுப்பார்கள். அவ்வப்போது இம்மாதிரியான சோதனைகள் கைகொடுக்காது என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.




 கற்பனை உலகம் இல்லாமல் ஒரு  பாண்டஸி கதை  இருக்குமா அப்படி ஒரு மாயாஜால உலகம் இங்கு உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரு விலங்கு உள்ளது அதை டெமோன் என்கிறார்கள்.இவர்களுக்கும் ஒரே ஆத்மா தான். அதாவது மனிதர் இறந்தால் கூடவே அவரது விலங்கும் இறக்கும். மனிதர்களும் விலங்குகளும் சேர்ந்து தான் வசிப்பார்கள் நார்னியாவை போல. அங்கு இருக்கும் சிறுமி தான் லைரா (lyra) அவளிடம் ஒரு உண்மையைக்  கண்டு அறியும்  கருவி கொடுக்கப்பட்டது அது தான் கோல்டன் காம்பஸ்.அதை அழிக்க வேண்டும் என்று அங்கு உள்ள ராஜா அரசாங்கம் முடிவுசெய்தது. அதில் மிச்சம் உள்ள கடைசி ஒன்று தான் இந்த சிறுமிடம் உள்ளது.அதை வைத்து அவள் என்ன பண்ணுகிறாள் அரசாகமிடம் இருந்து தப்பித்தாள என்பதை adventures நிறைந்த கதை தான் இந்த படம்.


படம் பார்க்க மிகவும் பிரம்மாண்டம் ஆக இருந்தாலும். அனிமேஷன் கிராபிக்ஸ் எல்லாம் சரியாக இருப்பினும் ஏதோ ஒன்று சுவாரசியம் சற்று குறைந்தாகவே இருந்தது. ஆனால் கதையாக பார்த்தால் மிகவும் பிரமாதம். பேசும் விலங்குகள், பனி கரடி ராஜாவாக மாறும் காட்சிகள், விமானம் போன்று பறக்கும் கப்பல்கள் ஒரு பாண்டஸி கதைக்கு தேவையான அனைத்து விஷயமும்  இருக்கிறது.


ஆகவே தான் அவர்கள் அடுத்த பகுதி எல்லாம் படமாக எடுக்கவில்லை. இந்த கதையை விட மனமில்லாமல் HBO - TV SERIES  ஆக  முழு தொடர் நாவலையும் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டனர். நாவலுக்கும்,TV SERIES கும் கிடைத்த வரவேற்பை விட படத்திற்கு குறைவுதான்.


Popular Posts