சிதம்பர நினைவுகள்

 

    முதலில் இந்த புத்தகத்தை அறிமுகம் படுத்திய  இயக்குனர் பாலுமகேந்திர அவர்களுக்கு நன்றி ஒரு பேட்டியின் போது இதை குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு நாவல் என கருதியிருந்தேன் பின்பு உள்ளடக்கத்தில் பார்க்கும் போது  தான் இது ஒரு மலையாள கவி-யின் நினைவு குறிப்பு கட்டுரை என்று தெரியவந்தது. ஆனால் படித்துமுடிக்கும் போது இது ஒரு கட்டுரையாக என்னால் கடைந்து போக முடியவில்லை.




ஒரே மூச்சில்  படிக்க கூடியவை என்றாலும் என்னால் தொடர முடியவில்லை மொழி நடை மிகவும் எளிமையாக இருப்பினும் என்னால் இரண்டு  அத்தியாயங்கள் மேல் தாண்ட மனம் ஏற்கவில்லை காரணம்  பாலசந்திரன் கள்ளிக்காடு -வின் நினைவு குறிப்பு. ஒரு மனிதன் எல்லா சூழ்நிலையிலும் ஒரே மனநிலையைக் கடைபிடிக்க முடிவது இல்லை அப்படிப்பட்ட நினைவுகளை நமக்கு  தமிழில்  மொழி பெயர்த்து  வழங்கியுள்ளார் கே.வி.ஷைலஜா அவர்கள். மூலம் மலையாளம் என்றாலும் கலப்படம் இல்லாமல் மொழி வாசிப்பதற்கும் லகுவாக உள்ளது.



கே.வி .ஷைலஜா


எனக்குத்  தெரிந்தவரை இப்படியொரு வீம்பு பிடித்த மனிதனைப் பார்த்தது இல்லை. GYPSY - போல தன்  வாழ்க்கையை  கழித்து  பல அனுபவங்களை சேகரித்துள்ளார்.ஒருவன் தன்  நினைவு குறிப்பு எழுதும் போது இவ்வளவு உண்மை கூடாது. சில அத்தியாயங்கள் படிக்கும் போது அவரின் மனைவி, பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் அவர்களும் இதை படித்திருப்பார்களே! என்று தான் தோன்றியது.

தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும் சம்பவங்களையும் 21 அத்தியாயங்களாக  சிறுகதை போன்ற வடிவில் தந்து உள்ளார். எனக்கு தீப்பாதி மற்றும் பைத்தியக்காரன் ஆகிய இரண்டு அத்தியாயமும் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை.முகமூடியை கழட்டி விட்டு தன் நிர்வாண வாழ்க்கையை நேரடியாக காட்டியுள்ளதே இதன் சிறப்பு.மிகவும் நேர்மையான நினைவு குறிப்பு.

படித்ததில் பிடித்தது 

 "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று 
ஒரு போதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை
அது உங்களுக்குப் பொத்திவைத்து காத்திருக்கும் 
எப்போதும் "

Popular Posts