மதில்கள்
இந்தியாவின் சிறந்த எழுத்தாளர் எனும் பட்டியல் இட்டால் அதில் வைக்கம் முகம்மது பஷீர்-யின் பெயர் நிச்சியமாக இடம் பெற்றுஇருக்கும். அவர் ஒரு மலையாள எழுத்தாளர். என்ன மலையாள எழுத்தாளரா! என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. பாடலுக்கும்,இசைக்கும் மொழி தடையில்லை என்பதை தாண்டி இப்போது படங்களுக்கும் மொழி தடையில்லை முன்பு மாதிரி யாரும் டப்பிங் படங்களைப் பார்ப்பதில்லை எல்லாம் படம் எடுக்கப்பட்ட மொழியிலே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் மலையாள படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல மலையாள கதையைப் படிக்க வேண்டும் என்று தேடியபோது தான் பஷீரை சென்று அடைந்தேன்.
![]() |
சுதந்திர போராட்டத்தின் போது சிறைக்கு சென்ற பஷீர். பக்கத்தில் அமைந்து இருந்த பெண் சிறைச்சாலையில் இருக்கும் நாராயணியை காதலிக்கிறார். இருவருமே பார்க்காமல் காதலிக்கின்றன. அதற்கு சாட்சியாகவும் தூதுவாகவும் விளங்குவது இரண்டு சிறைசாலைக்கு நடுவில் இருக்கும் "மதில்கள்" கதைக்கு ஏற்ற தலைப்பு. கதையின் நாயகனாக பஷீரே வருகிறார்.சிறைச்சாலை,கைதி, வார்டன், மரம், ரோஜா என அனைத்தும் ரசிப்பாராக உள்ளார் . நாராயணி கதை முடியும் வரை தேவதை போல ஒரு கற்பனை கதாபாத்திரமாக திகழ்கிறாள்.கதையின் முடிவு மீண்டும் படிக்க தூண்டும் மனதில் சில நிமிஷம் தங்கிவிடும் . மொழிபெயர்ப்பு-யில் பெயர்கள் மட்டும் உட்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் பின்பு கதையின் அலை நம்மை அடித்து சென்றுவிடும். சிறிய பக்கங்கள் கொண்ட எளிமையான காதல் கதை. 1990-ல் மலையாளத்தில் இது படமாக்கப்பட்டு மம்மூட்டி அதில் பஷீராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965-ல் அச்சிடப்பட்ட ஒரு குறுநாவல் இன்று வரை வாசகரால் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளார்க்குப் பின்பும் படைப்புகள் வாழும் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் 1965-ல் இது ஒரு "96"



