அணிலாடும் முன்றில்
திரைப்பட கவிஞர்களில் தவிக்க முடியாதவர் நா.முத்துக்குமார். அவரது பாடல்களில் மிகவும் கவித்துவமான வார்த்தைகள் இருக்காது ஆனால் எளிதில் புரியக்கூடியாகவும் புதிய கற்பனையாகவும் இருக்கும்."யாரடி நீ மோகினி" படம் மூலம் என்னக்கு பரிச்சியமானவர் நா.முத்துக்குமார் அவர்கள். அவரின் வார்த்தைகளும் புதிது ரசனைகளும் புதிது பின்பு நான் அவரின் எல்லா பாடல்களையும் தொடர ஆரம்பித்தேன். "அணிலாடும் முன்றில்" என்ற தலைப்பு ஏற்ப முதுகில் தன் மகனை சுமந்து இருப்பது போல நா.முத்துக்குமாரின் படம் இட்ட புத்தகத்தை ஒரு புத்தகக்காட்சியில் காண நேரிட்டது.அப்போது வாங்கிய புத்தகத்தை சமீபத்தில் தான் படித்து முடித்தேன்.
ஆலமரம் விழுதுகள் போல நம் சொந்தங்கள் விரிந்து இருக்கின்றன அப்படி ஆன தன் சொந்தங்களையும் உறவுகளையும் பற்றிய கட்டுரை தொகுப்பு. தனித்து வாழ்வதே குடும்பம் என கருதும் இந்நாளில் இம்மாதிரி ஆன புத்தகம் அவசியம். இக்கட்டுரை அம்மா-யில் தொடங்கி மகன்-யில் முடிக்கிறார் சுமார் 20 அத்தியாயங்கள் கொண்டு அனைத்து உறவுகளையும் தொட்டு செல்கிறார்.அனைவர்க்கும் அக்கா,தம்பி,அண்ணன் என அனைத்து உறவுகளும் வாய்ப்பது இல்லை இதில் நா.முத்துக்குமாருக்கு அக்கா இல்லாததால் தன் நண்பனின் அக்கா,சிறு வயதில் தன் வீட்டின் பக்கம் இருந்த அக்கா அவர்களை நினைவு கூர்ந்து எழுதியது சிறப்பு.
நீண்ட தொடர் கட்டுரை போல் இல்லாமல் இடையில் அவரின் கவிதை நம்மை ரசிக்கவைக்கின்றது. கதை சொல்லியாக கிளி,மழை,வெயில் வைத்து உறவுகளைப் பற்றி சொல்வது கவித்துவமான ஒன்றாக உள்ளது.தங்கை மற்றும் அவர் மகனுக்கு எழுதும் கடிதமும் என் மனதிற்கு நெருக்கமானவை. படிக்கும் பொழுது நம் நினைவில் மறந்து போன உறவுகள் எட்டிப்பார்க்கின்றன. சிறிய பக்கங்கள் கொண்ட எளிய மொழி நடை உடைய கட்டுரை. முதற்கட்ட வாசர்களுக்கு நான் பரிந்துரைக்கும் ஒன்று.
"அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அழகிய நிலா காலம் "

