தேசாந்திரி

   வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று என் விருப்ப பட்டியலில் இருந்தது தேசாந்திரி. "தி புக் ஷோ"-வின்  வாயிலாக பரிசாக பெறப்பட்டது.  ஸ்.ரா வின் படைப்பில் அனைவரும் பரிந்துரைக்கும்  ஒன்றாக  தேசாந்திரி இருந்தது அதனால் தான்  என்னவோ அதன் மீதான ஆவல். தான் பயணித்த இடங்களையும், அங்கு நேர்ந்த அனுபவங்களையும்  விவரிக்கும்  தொகுதிதான் தேசாந்திரி.


இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாறு ரீதியான விளக்கும் கொடுக்கிறார் அதன் சிறப்பு உணர்த்துவதின் மூலமாக கலாசாரம், நம்பிக்கை,தனித்துவம், என பல தரப்பட்ட வகையில் தெளிவு கிடைக்கிறது. ஸ்.ரா ஒரு சிறந்த கதை சொல்லியாக இருப்பதனால் பயண கட்டுரை  பாணியில் இருந்தாலும் அங்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கும் போது மனிதர்களின் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.நாம் நம் பயணத்தின் போது  எதை எல்லாம் தவற விடுகிறோம் என்பதையும்  காணமுடிகிறது.




புதிய  இடங்களுக்கு செல்வதைக்  காட்டிலும்  அன்றைய காலத்து கட்டிடம்,ஓவியங்கள்,மரங்கள்,மலைகள்,கடல்,பாலைவனம் தேடி  சென்று  பார்த்து ரசிப்பது தான் உண்மையான பயணம் என்று உணரவைக்கிறது.சென்னையில் உள்ள சிறப்பிக்க இடங்களை பற்றி  வரலாறுடன் பதிவியாகி உள்ளது. ஒரு மரத்தின் ஓரத்தில் நின்று ஸ்.ரா வின் பயணத்தை வேடிக்கையாளரைப்  போல பார்க்கும் சுவாரசியமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். பயணம் செல்லுவோர், பயணம் செல்லாதோர் என அனைவரும் படிக்க  வேண்டிய ஒன்று. படித்த பின் நிச்சியம் கால்கள் தானாக பயணிக்க ஆரம்பிக்கும்.



                            "கலைவார் அவரெல்லாம் தொலைவார்
                             வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
                             அவர் அடையும் புதையல் பெரிது
                             அடங்காத நாடோடி காற்றல்லவா.."



Popular Posts