வாடிவாசல்

  1959-வில் வெளிவந்த ஒரு குறுநாவல் இன்று திரைப்படபாக  எடுக்கப்படஉள்ளது. ஆனால் அப்போது பெரும் வரவேறுப்பு பெற்றதா என தெரியவில்லை. இக்குறுநாவலின் எழுத்தாளரான சி.சு.செல்லப்பா அவர்கள் தன்  சொந்த பத்திரிகையான "எழுத்து"-யில்  வாடிவாசலை விளம்பரப்படுத்தினார்.


சி.சு.செல்லப்பா

தமிழ் இலக்கியத்தில் வெகு சிலர் மட்டும் தொட்ட  களம்  ஜல்லிக்கட்டு. மிகவும் எளிமையான பழிவாங்கும் கதை ஆனால் மனிதர்க்கும் மிருகத்திற்கும் நடக்கும் விளையாட்டு அல்ல போர்.கதை முழுக்க ஜல்லிக்கட்டு களத்தில் மட்டும் நடைபெறுகிறது  ஆயிரம் கணக்கான மாடுகள் அலங்கரித்து வருகையில் சுற்றி இருக்கும் எட்டு ஊரு ஜனங்கள் கூட்டத்தில் நடக்கும் செல்லாயி ஜல்லிக்கட்டு  மூச்சுமுட்ட வைக்கிறது.பிச்சி மற்றும் காரி என்கிற காளை இருவரைவும்  சுற்றிதான் கதை நகரும். வட்டார வழக்கு மற்றும் ஜல்லிக்கட்டு பற்றியான சொற்கள் இருப்பதினால் கதையுடன் பயணிக்க தாமதமாகிறது.காளை  தழுவும் காட்சிகள் மிகவும் தத்துருவமாக எழுதியுள்ளார். வெற்றிமாறன் எப்படி ஜல்லிக்கட்டு காட்சிகளை எடுக்கப்போகிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

இதை சாதாரண கதையாக கடக்கமுடியாது  ஒரு பல்கலைக்கழகம்  பாடத்திட்டத்தில் இருக்கும் ஆழம் இதில் உள்ளது. வெற்றி அடைய தேவையான விஷயங்களை இதில் சொல்லாமல் சொல்லிருக்கிறார் சி.சு.செல்லப்பா. 



பிச்சி களத்தில் காரியுடன்  நிற்கும் போது கூட்டம் பிச்சி வெற்றி பெறமாட்டான் என்று கூச்சலிடும் ஆனால் அதுவெல்லாம் அவன் காதில் போட்டுகொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டில் ஆயிரம் கணக்கான மாடுகள் பங்குபெறும்  அனைத்தும் பற்றி தெரிந்தால் தான் களத்தில் இறங்கவேண்டும் என்றால்  அது சாத்தியமற்றது நேரத்திற்கு  ஏற்றாறு போல் யூகம் அமைக்க வேண்டும்.

பிச்சி ஒரு மாடுபிடி வீரனாக இருப்பினும் கூட எளிதாக வெற்றி கிடைக்கவில்லை வருவது எந்த ரக மாடு அது எப்படி தாக்கும் என்ற தகவல் மாடுபிடி வீரனாக இல்லாத ஒருவர் தன்  வாழ்நாளில் ஜல்லிக்கட்டை  வெறும் பார்வையிடும் கிழவனின் அறிவுரையால் சாத்தியமானது.

ஜல்லிக்கட்டிற்கு வரும் அனைத்து  மாடுகளையும் பிடிக்க வேண்டும் என்று பிச்சி நினைக்கவில்லை அவன் திறமைக்கு ஏற்றவாறு பிடிபடு மாடுகளை தேர்வு செய்தான்.

வெற்றி பெற்ற பின்னர் அவன் தான் உண்மையான வீரன் என அதே கூட்டம் வேறுவிதமாக கூச்சலிட்டது. 

Popular Posts