யாத்ரா
பாலுமகேந்திராவின் ரசிகன் ஆன எனக்கு அவரின் திரைப்படம், புகைப்படம் பிடிக்கும். ஆனால் அவரின் எழுத்தைப் பற்றி அறிய உதவியது "யாத்ரா". "யாத்ரா -பாலுமகேந்திரா வின் சுயசரித்தை" காலம் எனும் மாய பிசாசு அவரை விட்டு சென்றுயிருந்தால் அப்படிதான் தலைப்பு வந்திருக்கும்.
தன் வாழ்கையில் நடந்த சில சம்பவமங்களை மட்டும் இதில் பதிவு செய்துள்ளார். மிக எளிமையான நடையில் அனைவரும் வாசிக்க கூடிய வகையில் அவர் எழுதியது சிறப்பு. இத்துடன் ஒரு நேர்காணல் இணைத்து தொகுத்துள்ளார் நம் கதை சொல்லியான பவா. வம்சி புக்ஸ்-யில் மட்டும் கிடைக்கும்.
| யாத்ரா |
பாலு மகேந்திராவின் உண்மையான பெயர் "மகேந்திர" அவரின் அப்பா பெயர் தான் "பாலநாதன்". இளையராஜா இசையமைப்பாளர் ஆவது முன்பே பாலுமகேந்திராவிற்குப் பரிச்சியம் அப்போது முடிவு செய்தார் தான் இயக்கும் முதல் படத்தில் இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று. ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை பின்னர் தனது மூனாவது படத்தில் தான் இளையராஜா-வை வைத்து இசையமைத்தார் அது இளையராஜாவிற்கு 100-வது படம் ஆனது அது தான் "மூடுபனி".
இது போல நமக்கு தெரிந்தும் தெரியாத பல சுவாரசியம் உள்ளன. குறிப்பாக டிரேக்டர் மகேந்திரன் உடனான இணக்கம், ஷோபா மீதான பாசம், அர்ச்சனா மீதான நம்பிக்கை, இளையராஜா உடனான நட்பு, ஜெயகாந்தன் மீதான இலக்கிய ஆவல் மற்றும் சினிமா மீதான காதல் எல்லாம் வெளிப்படையாக எழுதியுள்ளார். நல்ல சினிமா என்பது தண்ணீர் கலக்காத பால் மக்களை அந்த சினிமாவிற்கு பழக்க படுத்தவேண்டும் எனும் சினிமாக்காரனுக்கு தேவையான சரக்கு இதில் உள்ளது.
"அவரின் ரசிகரான அனைவருக்கும் யாத்ரா - அவருடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லும் ஒரு பயண அனுபவம்."

