பேட்டை

     பல வட்டார வழக்கு தமிழில் இருந்தாலும் தமிழ்நாட்டின் மொழி என்றால்    பலருக்கு நினைவுக்கு வருவது "மெட்ராஸ் பாஷை" தான்.இப்போது ஏதோ பரவாயில்லை முன்பு பல படங்களில் அந்த வட்டார மொழியை கேலியும் கிண்டலுமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.இலக்கியத்திலும் அவர்களின் வாழ்வியலை அறிவதற்கு பெரியதாக ஒன்றும் இல்லை ஏதோ ஒரு சில கதாபாத்திரம் ஜெயகாந்தன் நாவலில் எட்டி பார்ப்பதோடு சரி.

வட்டார வழக்கு கதைகளைப்  படிப்பதில் கூடுதல் பலன் உண்டு படிக்கும் போதே அந்த ஊருக்காராக உங்களை  மாற்றிவிடும். அப்படி  ஒரு வாரமாக சிந்தாதிரிபேட்டையில் வசிக்க வைத்து கூவம் வாசனையை உணரவைத்தது "பேட்டை". வெறும் மெட்ராஸ் பாஷை-யில் மட்டும் பேசி செல்லாமல் அதன் வரலாற்று ரீதியான சம்பவங்கள் மற்றும் வாழ்வியல் முறை என அனைத்தையும் தொட்டு சென்றிருக்கிறார் தமிழ்ப்பிரபா.நாவல் வந்த புதிதில் பெரும் வரவேற்பு பெற்றது அப்போது எதிர்ச்சியாக கண்ணில் பட்ட காணொளி வாயிலாக அறிமுகம் ஆனது பேட்டை.வட்டார வழக்கு கதை எளிதில் புரியாது என்பதால் வாங்கவில்லை.பின்னர் அந்த ஆசையை  கிள்ளி விட்டவர் பா.ரஞ்சித் ஆம் அவரின் சார்பட்டா பரம்பரை படம் பார்த்து பிரம்பித்தேன். தமிழ்ப்பிரபா தான் அந்த படத்தின் கதைஆசிரியர் என தெரிந்த உடனே பேட்டை-யை வாங்கிவிட்டேன்.


தமிழ்ப்பிரபா 

தமிழ்ப்பிரபா வின் எழுத்து நடை படிப்பதற்கு லகுவாகவும்  ஒரு சில மெட்ராஸ் வழக்கு சொல் பார்ப்பதற்கு புதிதாகவும் உள்ளது. அந்த சொல்லுக்கான விளக்கம் கொடுத்திருப்பது சிறப்பு.ரெஜினா,நகோமி,ரூபன் ஆகிய மூவருமே முக்கிய கதாபாத்திரம் பெருமபாலான சம்பவங்கள் ரூபனைச் சுற்றி நிகழ்வதால் கதையின் நாயகனாக கருதலாம்.ஆனால் அனைத்து  மனிதர்களுக்கும் ஒரு தனி கதை ஒரு பின்னணி உள்ளது அதை அழகாக  வெளிக்காட்டியுள்ளார்.நகோமி நம் வாழ்க்கையில் யாரோ ஒருவரை நினைவுபடுத்திக்கிராள். சார்பட்டா பரம்பரை டாடி இதில் கெஸ்ட் ரோலாக வருகிறார். விறுவிறுப்புடன் கதை நகர்வதால் எந்த இடத்திலும் தொய்வு   இல்லை.




"சின்ன தறிப்பேட்டை என இருந்து சிந்தாதிரிபேட்டையாக  மாறியது" என வரலாற்று ரீதியாக தொடங்கி அங்கு வாழும் ஹௌசிங் போர்டு மக்களின் மதம், வாழ்க்கை முறை , நம்பிக்கை , உணவு, திறமை  என அனைத்திலும் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது மற்றும் ஒரு மதம் எப்படி ஒருவனுக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெளிப்படியாகவும் ரசிக்கும்படியாகவும் எழுதியுள்ளார்.

"உண்மையான மெட்ராஸ் வாழ்வியலை அறிவதற்கு பேட்டை ஒரு வழிகாட்டி" 

Popular Posts