தண்ணீர்
"அவரை படிக்கவில்லையா முதலில் அவரது படைப்புகளை படியுங்கள்" என்று பல பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போது பெரிய ஆர்வம் வந்தது இல்லை தண்ணீர் படித்த பின் அவர் மற்றும் அவரது படைப்புகளின் மீதான ஆர்வம் வந்து உள்ளது. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் அவரே தான் அலங்காரம் இல்லாத எழுத்துக்கு சொந்தக்காரர் அசோகமித்திரன்.
![]() |
| அசோகமித்திரன் |
"தண்ணீர்" கதைக்கு ஏற்ற தலைப்பு. 1970 களில் - சென்னையில் ஏற்படும் தண்ணீர் பஞ்சம் தான் கதையின் களமாக அமைகிறது. ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கை மட்டும் அல்லாமல் காலனியில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தத்துருவமாக விவரிக்கிறது. அலங்காரம் வார்த்தைகள் எதுவும் இல்லாமல் சிறிய பக்கங்கள் கொண்ட கனமான யதார்த்த நாவல். எல்லா பெண்களின் வாழ்க்கை ஒரே மாதிரி அமைவது இல்ல என்றாலும் அவர்களின் துயரம் மற்றும் ஏறத்தாழ ஒரே அளவு தான்.
டீச்சரம்மா ஒரு சின்ன கதாபாத்திரமாக வந்தாலும் அவளின் வாழ்க்கையை வாசிக்கும் போது ஒரு நொடி யாவது நம் கஷ்டங்களை நினைத்து பார்ப்போம். தண்ணீர் இல்லையெனில் மனிதர்களின் இடைய நடைபேரும் பொறாமை, சுயநலம் என பல முகங்கள் வெளிப்படுகின்றது. கதையின் முடிவு தண்ணீரை மறு வாசிப்பு செய்ய தூண்டுகிறது.
"ஜெயகாந்தனுக்கு ஒரு கங்கை போல அசோகமித்ரனுக்கு ஒரு ஜமுனா"



