வெண்ணிற இரவுகள்

    பெரும்பாலான எழுத்தாளர்களும் , கலைஞர்களும் தத்துவரீதியாக வேறுபாடு இருந்தாலும் ஒத்துப்போகும் ஒரு புள்ளி  உண்டு. ஸ்.ரா முதல் மிஷ்கின்  வரை திரும்ப திரும்ப பரிந்துரைக்கும் ஒருவர் என்றால் அது தஸ்தவெவ்ஸ்கி  தான். அவரின் படைப்புகள்  எல்லாம் பெரும்  இலக்கியம்  தான். தஸ்தவெவ்ஸ்கி படைப்புகளை வாசிக்க முற்படலாம் என எண்ணும்  போது அதன் பக்கங்களே விரட்டிவிடும். மிக குறைவான பக்கங்கள் கொண்ட தஸ்தவெவ்ஸ்கி-யின் "வெண்ணிற இரவுகள்" குறுநாவலை  வாசிக்க நேர்ந்தது.

 

தஸ்தவெவ்ஸ்கி 

ரா.கிருஷ்ணையா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாசிக்க தொடங்கினேன்  ஆனால் இடைவேளை இல்லாமல் தொடர முடியவில்லை சில வார்த்தைகள் உச்சரிப்பதில் சிரமம் இருந்தது. முடித்த பின் மனம் வாசித்த  சுவையை அசைபோட்டு கொண்டே இருந்தது. அதான்  எழுதிவிடலாம் என விரைந்து விட்டேன்.


வெண்ணிற இரவுகள்

கதைசொல்லியாக வருபவர் தான் கதையின் நாயகன்  நாஸ்தென்கா என்பவர் ஒருதலையாக காதலிக்கிறார் ஆனால் நாஸ்தென்கா மற்றொருவரை காதலிக்கிறாள்  ஆகவே மூவருக்கும் இடைய நிகழும் காதல் போராட்டம் தான் கதையின் சுருக்கம்.கதை நான்கு இரவு ஒரு பகல் என  முற்றிலும் சுவாரஸியமான  உரையாடலாக நிகழக்கூடியது. " நாஸ்தென்கா முன்பு நீங்கள் மூட்டைத்  தூக்கிக் கொண்டு அவரிடம் போனபோது உங்களுக்கு எப்படி இருந்ததோ அதே போல தான் எனக்கும் இப்போது இருக்கிறது" என கதைசொல்லி  தன்  காதலை அவள் பாணியிலே உணர்த்திருப்பது மிகவும் நெருக்கமான இடம். தனிமையைப் பற்றி விவரிக்கும் காட்சியெல்லாம் நாமும் தனிமையை அள்ளி  அப்பிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.

இந்த கதை உலகம் முழுவதும் படம் ஆக்கப்பட்டுள்ளது. இயற்கை என்ற பெயரில் தமிழில் ஸ்.பி. ஜனார்த்தனன் அவர்கள் இயக்கியுள்ளார்.ஆனால்  நாவலுக்கும் படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் இரண்டுமே அற்புதம். 


"வாழ்க்கையில் ஒருமுறையாவது  அனைவரும் வெண்ணிற இரவுகளில்  சுவாசிக்க வேண்டும் "

Popular Posts