My dear Pen...

அன்புள்ள ஜெ,

Reciprocation என்ற விவாதம் எழும் பொது தான் உள்ள நுழைந்தேன் வாசக சாலை காத்திகேயன் பேசி கொண்டு இருந்தார்  மணி சரியாக 11 இருக்கும். 

"சார்,நீங்க கொஞ்சம் முன்னாடி உக்காந்துக்கோங்க இது தான் வாசல் இருந்து போறதுக்கு ஒரே வழி" என்று என்னை முன்னாடி அமரவைத்தார் போட்டோக்ராபர்.


ஓர் அரங்கு முழுவதும் வயது பேதம் இன்றி நிரம்பி இருப்பதை திரை அரங்குக்கு அப்புறம் சனிக்கிழமை  நடந்த  கூட்டத்தில் தான் பார்த்தேன்.நம்ம ஊரில இலக்கிய வாசிப்பு உள்ளவிங்க இத்தனை பேரா என்று ஆச்சரியம் பட்டேன். ஒரு வேளை என்னக்கு இது முதல் கூட்டம் என்பதால் கூட இந்த ஆச்சரியம் வந்துயிருக்கலாம்.


எனக்கு விருப்பமான எழுத்தாளர்கள் அங்கு இருந்தார்கள், அவர்களிடம் பேச ஆசையாக இருந்தாலும் என்ன பேசுவது என்ற குழப்பம் மற்றும்  தாழ்வு மனப்பான்மையும்  இருந்தது. கழுகு தன் இறைக்காக காத்திருப்பதை போல மயிலான் , தமிழ்ப்பிரபா இருவரிடமும் பேச வேண்டும் என்ற இறையை (இலக்கு) மட்டும் வைத்துக்கொண்டேன். அவர்கள் தனியே இருக்கும் தருணத்தில் போய் பேச ஆரம்பித்தேன். பெரும் இலக்கிய ஞானம் இல்லாததால் அவர்களின் படைப்பை படித்த அனுபவத்தை மற்றும் அடுத்த படைப்பு என்னவென்று என்ற கேள்வி மட்டும் கேட்டு விட்டு  நினைவுக்காக ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.



இதுமட்டும் இல்லாமல் புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. எம்.கோபாலகிருஷ்ணன் இடம் " சார், நீங்க ஒரு பெரிய எழுத்தாளர்னு தெரியும், ஆனால்  யார் என்று தெரியல?" என்று கேட்டேன் எப்படி அந்த தைரியம் வந்ததுனு தெரியவில்லை. அவர் சற்றும் மாறாத அந்த கலகலப்பான முகத்துடன் தான் யார் என்று அறிமுகம் செய்துவிட்டு என்னைப்பற்றி விசாரித்தார் அப்புறம் உங்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை அவரிடம் கேட்டேன் முழு விவரம் கிடைத்தது. அப்போது பேச்சு வாக்கில் ஒன்று சொன்னார் " இந்தியா அளவில் நடத்தப்படும் இலக்கிய விழாவிற்கும் சற்றும் குறை இல்லாத ஓர் இலக்கிய திருவிழா" என்று முற்றிலும் உண்மை தான், இதை நான் இப்படி சற்று மாற்றி கொள்கிறேன் "இலக்கிய விருந்து" எதிர்பாராத அந்த மதிய உணவு மிகவும் அருமை.


மாலை 6 மணிக்கு பஸ்சை புடிக்க வேண்டும் என்பதால் 5 .30 மணி அளவில் புறப்பட்டு விட்டேன்.அதற்கு முன் அந்த கழுகு ஜெ யை குறிப்பார்த்தது.ஆனால் உங்களின் தனிமையைக்காக காக்கவேண்டுமென்றால் அது ஆகாத காரியம் என்று தெரித்தது.


உங்க புத்தகத்தில் கையொப்பம் வாங்கும் சாக்கில் வந்தேன், மிட்டாய் கடையைப் பார்த்த சிறுவன் போல மெய்மறந்து அப்படியே நின்று விட்டேன்.சும்மா விடுவார்கள் நம் பத்தர்கள் இவன் சும்மா வேடிக்கை பார்க்கவந்தவன் என எண்ணி மொபைல் கையில் குடுத்து போட்டோக்ராபர் ஆகிவிட்டார்கள். எல்லாருக்கும் போட்டோ எடுத்து கொடுத்து விட்டு. பின்பு நான் வாங்கிய புத்தகத்திற்கு கையொப்பம் வாங்கும் பொழுது உங்களின் பேனா மை தீர்ந்துவிட்டது. என்னுடைய பேனாயை தந்தேன் கையொப்பம் இட்டு உங்களியுடன் பேச தொடங்கினேன் பதற்றம் இல்லாத அந்த உரையாடல் அழகானது



உங்களின்  சட்டை பையில் பேனாவை சொருகியபோது அதற்கு ஆனா இடத்தை அதுவே தேடிவிட்டது என புரிந்தது.என்னுடடைய  அன்பளிப்பாகவும் அது அமைந்தது.அந்த பேனா வில் இருந்து அடுத்த வரிப் பிறந்தால் கூட நான் பாக்கியசாலி  தான்.


இது தான் என்னுடைய முதல் கூட்டம் என்பதால் குறை கூற ஒன்னும் இல்லை.நான் ஈரோடு பவானில் இருந்து வருவதால் தங்கும் வசதி தேவைப்படவில்லை.கனவு போல அந்த நாள் அமைவதற்கு காரணமாக இருந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு என்னுடைய நன்றிகளும், வணக்கங்களும்.


பின் குறிப்பு : விருந்தினர் களின் எல்லா புத்தங்கள் கிடைக்கவில்லை அதை மட்டும் அடுத்த ஆண்டு கிடைக்குமாறு  செய்யவும் 



                                                                                                                                    இப்படிக்கு 

                                                                                                                                    குருநாதன் 


Popular Posts