தொலைந்து போனவர்கள்
தவிர்க்க முடியாத தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பட்டியல் எடுத்தால் அதில் சா.கந்தசாமி கட்டாயம் இடம்பெறுவார். அதற்கு சாயாவனம் ஒரு சான்று அதை படித்த பின் யாரும் காடுகளை வெறும் காடு என்று எளிதாக கடந்து விடமுடியாது.உணர்ச்சி எழுப்பும் வகையில் எழுதிய மற்றொரு குறுநாவல் தான் தொலைந்து போனவர்கள்.
பால்யக காலத்தில் நண்பர்களான சங்கர்,வேணு,ராமசாமி,தாமோதரன் ஆகிய நால்வரின் கதை.கால ஓட்டத்தில் காரணமாக அனைவரும் வெவ்வேறு இடத்தில் புலம் பெயர்கிறார்கள். முப்பது வருடம் கழித்து தாமோதரன் ஒரு போராட்ட கூட்டத்தில் தன் நண்பனான சங்கரை காண நேர்கிறது.பின்பு அவன் முலமாக பாக்கி இருக்கும் இருவரையும் தேடி செல்கிறான்.துப்பறியும் நாவல் போல் தான் கதையின் தொடக்கம் அதற்கு ஏற்றாறு போல் சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பாக செல்கிறது. எந்த அலங்காரம் இல்லாமல் யதார்த்தமான எளிய நடையில் வடிமைத்து உள்ளார்.
வாழ்க்கை பல ஆச்சரியங்களை ஒளித்து வைத்துள்ளது. சிறு வயதில் நாம் எப்படி இருந்தோமோ அப்படிப்பட்ட மனிதர்களாவே இப்பவும் இருப்போவமா என்றால் இல்லை.பணம், வறுமை ஒருவரின் உறவுமுறையில் எப்படி பங்களிக்கிறது என்பதை சிந்திக்கவைக்கிறது.


